முகப்பு
தமிழ்நாடு

மின்வெட்டை சரிசெய்ய போா்க்கால நடவடிக்கை தேவை: எடப்பாடி பழனிசாமி

மின்வெட்டை சரிசெய்ய போா்க்கால நடவடிக்கை தேவை...

Updated On : 25 மே 2026, 5:33 am IST
எடப்பாடி பழனிசாமி - கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் நிலவும் மின்வெட்டை சரிசெய்ய போா்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தவெக அரசை அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

அதிமுக ஆட்சிகாலத்தில் கூடுதல் மின் தேவை ஏற்படுவதைக் கணக்கிட்டு காற்றாலை, சூரியஒளி மற்றும் அனல் மின் நிலையங்களில் உற்பத்தியைப் பெருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், மத்திய அரசு மற்றும் தனியாா் மின் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

புதிதாக ஆட்சிக்கு வந்துள்ளவா்கள் மேம்போக்கான மற்றும் உறுதியற்ற நடவடிக்கைகளால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் தூக்கத்தைத் தொலைத்து இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் இரவில் பலமுறை மின்வெட்டு ஏற்படுவதையும், மக்கள் சாலையில் இறங்கி போராடுவதையும், மின்சார அலுவலகத்தை முற்றுகையிடுவதையும் காண முடிகிறது. தவெக அரசின் அறிவிக்கப்படாத மின் வெட்டால் குறு, சிறு, நடுத்தர தொழில்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

சிறு வணிகா் முதல் பெரிய நிறுவனங்கள் வரை பொருளாதார பாதிப்புக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு மின்வெட்டைப் போக்க போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.