பெங்களூரு

மாற்றுத் திறனாளிகளுக்கு சான்றிதழ்

DIN

மாதந்தோறும் 2-ஆவது வெள்ளிக்கிழமை கோலார் தங்கவயலில் மாற்றுத் திறனாளிகளுக்குத் தேவையான அரசு சான்றிதழ்கள் வழங்கப்படும் என எம்எல்ஏ ரூபகலா தெரிவித்தார்.
கோலார் தங்கவயலில் உள்ள அரசு பொதுமருத்துவமனையில் வெள்ளிக்கிழமை நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான முகாமை குத்துவிளக்கேற்றி தொடக்கிவைத்து, அவர் பேசியது: கோலார் தங்கவயலில் உள்ள மாற்றுத் திறளினாளிகள் அவர்களுக்கான அரசு சான்றிதழை பெற கோலார் மற்றும் பங்கார்பேட்டை சென்று வாங்கிவர வேண்டிய நிலை உள்ளது. 
இதனால் அவர்களுக்கு  மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. இனிமேல் ஒவ்வொரு மாதமும் 2-ஆவது வெள்ளிக்கிழைமைகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு கோலார் தங்கவயலிலேயே அரசு சான்றிதழ் வழங்கப்படும். அதேபோல் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு திட்டங்களின்படி உள்ள சலுகைகள், செயற்கை மாற்று உறுப்புகள் வழங்கப்படும். 
அரசு பொதுமருத்துவமனையில் சேதமடைந்துள்ள சுற்றுச் சுவரை சீரமைத்து, உயர்கோபுர மின்விளக்கு பொருத்தி, தண்ணீர் வசதியை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT