முகப்பு
பெங்களூரு

விபத்தில் மருத்துவமனை ஊழியர் சாவு

மோட்டார் சைக்கிள் கவிழ்ந்ததில்,  தனியார் மருத்துவமனை ஊழியர் உயிரிழந்தார்.

Updated On : 22 அக்டோபர், 2018 at 9:35 AM
பகிர்:

மோட்டார் சைக்கிள் கவிழ்ந்ததில்,  தனியார் மருத்துவமனை ஊழியர் உயிரிழந்தார்.
பெங்களூரு ஹெப்பாளைச் சேர்ந்த சரண் (23),  தனியார் மருத்துவமனையில் ஊழியராகப் பணியாற்றி வந்தார்.
இவர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2 மணிக்குத் தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப் போது, ஹைகிரவுண்ட் வின்சன்மேனர் மேம்பாலத்தின் அருகே கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள், போக்குவரத்து போலீஸார் நிற்கும் நிழல்குடையின் மீது மோதியுள்ளது. 
இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சரண்,  நிகழ்விடத்திலேயே காயமடைந்துள்ளார். அவரது நண்பர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
இதுகுறித்து ஹைகிரவுண்ட் போக்குவரத்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.