முகப்பு
பெங்களூரு

காங்கிரஸின் வளர்ச்சியை தடுக்கவே சிறைக்கு சென்றிருந்தேன்: பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி

காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியைத் தடுக்கவே சிறைக்கு சென்றிருந்தேன் என்று பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி தெரிவித்தார்.

Updated On : 3 செப்டம்பர், 2018 at 9:29 AM
பகிர்:

காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியைத் தடுக்கவே சிறைக்கு சென்றிருந்தேன் என்று பாஜக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி தெரிவித்தார்.
பெலகாவி மாவட்டத்தின் செளதாத்தியில் ஞாயிற்றுக்கிழமை வெங்கட ரெட்டி நினைவுப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்து அவர் பேசியது: சட்டவிரோத சுரங்கத் தொழில் வழக்கில் சிபிஐ என்னை கைது செய்து சிறையில் அடைத்தது. இந்த வழக்கு மட்டுமல்லாது பல்வேறு வழக்குகளில் 4 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தேன். முன்னாள் எம்எல்ஏ வெங்கட் ரெட்டி, காங்கிரஸ் கட்சியை வளர்த்தெடுப்பதாக 8 ஆண்டுகாலம் சிறைவாசத்தை அனுபவித்தார். ஆனால் நானோ காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சியைத் தடுக்கவே 4 ஆண்டுகள் சிறையில் இருந்தேன். 
சிறைக்கு சென்றதில் எனக்கும் வெங்கட் ரெட்டிக்கும் சம்பந்தமிருக்கிறது. ஆனால் காரணங்கள் தான் வெவ்வேறாக இருக்கிறது என்றார் அவர். இதை சொன்ன போது மக்கள் கைதட்டி வரவேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.