முகப்பு
பெங்களூரு

போதைப்பொருள் விற்பனை: 2 பேர் கைது

எம்.டி.எம்.ஏ உள்ளிட்ட போதைப்பொருள்கள் விற்பனை செய்த 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Updated On : 3 செப்டம்பர், 2018 at 9:25 AM
பகிர்:

எம்.டி.எம்.ஏ உள்ளிட்ட போதைப்பொருள்கள் விற்பனை செய்த 2 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு காமாட்சிப்பாளையா மாருதிநகரைச் சேர்ந்தவர் சுரேஷ் (47). இவர் தனது வீட்டில் கல்லூரி மாணவர்கள் இளைஞர்களுக்கு எம்.டி.எம்.ஏ, எல்.எஸ்.டி, ஹாஷிஷ் உள்ளிட்ட போதைப்பொருள்களை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்து விற்பனை செய்து வந்தாராம். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார், சுரேஷைக் கைது செய்து, ரூ. 15 லட்சம் மதிப்புள்ள 169 கிராம் எம்.டி.எம்.ஏ, 168 கிராம் எல்.எஸ்.டி, 210 கிராம் ஹாஷிஷ், செல்லிடப்பேசி, எடைப்பார்க்கும் இயந்திரம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். 
இதுகுறித்து காமாட்சிப்பாளையா போலீஸார் விசாரிக்கின்றனர்.
இதேபோல பசவேஸ்வரநகர் முதலாவது பிரதான சாலையைச் சேர்ந்தவர் ஆதர்ஷ் (23). இவர் தனது வீட்டின் அருகே எம்.டி.எம்.ஏ, எல்.எஸ்.டி உள்ளிட்ட போதைப்பொருள்களை இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்தாராம். 
இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார், ஆதர்ஷைக் கைது செய்து, ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள 11 கிராம் எம்.டி.எம்.ஏ, 11 எல்.எஸ்.டி பேப்பர்களை பறிமுதல் செய்துள்ளனர். இதுகுறித்து பசவேஸ்வரநகர் போலீஸார் விசாரிக்கின்றனர்.    

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.