ஜம்முவில் கட்டுமானப் பாலம் இடிந்து விழுந்ததில் சிக்கிய 3 தொழிலாளர்கள் பலி!
ஜம்முவில் கட்டுமானப் பாலம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கிய 3 தொழிலாளர்கள் பலியாகினர்.
ஜம்முவில் கட்டுமானப் பாலம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கிய 3 தொழிலாளர்கள் பலியாகினர்.
ஜம்முவின் புறநகர்ப் பகுதியான தத்தார் பெட்ரோல் நிலையம் அருகே வெள்ளிக்கிழமை மதியம் கட்டுமானப் பாலத்தின் ஒரு பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் நான்கு தொழிலாளர்கள் இடிபாடுகளுக்கு இடையே சிக்கிக்கொண்டனர்.
இதைத்தொடர்ந்து, மாநில பேரிடர் மீட்புப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை, போலீஸார், ராணுவம் உள்ளிட்டோர் உடனடியாக மீட்புப் பணியைத் தொடங்கினர்.
Advertisement
Advertisement
சிக்கிக்கொண்ட தொழிலாளர்களில் ஒருவர் வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டு, உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இடிபாடுகளில் இருந்து மற்ற மூன்று தொழிலாளர்களின் உடல்கள் சனிக்கிழமை மீட்கப்பட்டது. இதையடுத்து மீட்புப் பணி நிறைவடைந்தது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து இரண்டு உதவிச் செயல் பொறியாளர்கள் மற்றும் இளநிலைப் பொறியாளரை இடைநீக்கம் செய்து துணை முதல்வர் சுரேந்தர் சிங் நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவையும் அரசு அமைத்துள்ளது.
கடந்த ஆண்டு திடீர் வெள்ளத்தில் சேதமடைந்த பாலத்திற்கு அருகில் உள்ள தடுப்புச் சுவரில் தொழிலாளர்கள் பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
Bodies of three workers, who were trapped in the debris of an under-construction bridge that collapsed on Friday in Jammu's Bantalab, were recovered in the early hours of Saturday.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.