ஹிமாசலில் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து தொழிலாளி பலி, 7 பேர் காயம்!
ஹிமாசலில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த பாலம் திடீரென இடிந்து விழுந்தது பற்றி....
ஹிமாசலில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த பாலம் திடீரென இடிந்து விழுந்ததில் தொழிலாளி பலியானார்.
ஹிமாசல பிரதேச மாநிலம், மசியானா கிராமத்திற்கு அருகே கட்டப்பட்டு வந்த பாலத்தின் ஒரு பகுதி வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் தொழிலாளி பலியாகினர். மேலும் 7 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
மதூர்-சிம்லா நான்கு வழிச்சாலையின் குறுக்கே இந்தப் பாலம் கட்டப்பட்டு வருகிறது. பாலம் இடிந்து விழுந்தபோது, கட்டுமானப் பொருட்கள் சுமார் 100 அடி ஆழமுள்ள பள்ளத்தில் விழுந்ததோடு தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர் என்று சம்பவத்தை நேரில் பார்த்த தேஷ் ராஜ் தெரிவித்தார்.
Advertisement
Advertisement
ஒருவர் பலியானதாகவும், 7 பேர் காயமடைந்ததாகவும் நைப் வட்டாச்சியர் ர் பிரேம் சந்த் கூறினார். காயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார். காயமடைந்தவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் ஹமீர்பூரில் உள்ள மருத்துவக் கல்லூரிக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டனர்.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்ட அறிக்கையின்படி, 90 மீட்டர் நீளமுள்ள 'ட்ரஸ்' வகை பாலத்தை பொருத்தும் பணியின்போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பாலத்தின் முன்பகுதி தூணின் மேல் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டபோது, இயந்திரக் கோளாறு காரணமாக திடீரென இடிந்து விழுந்தது.
இதனால் அந்த 'ட்ரஸ்' கட்டமைப்பு கீழே விழுந்ததாக ஆணையம் தெரிவித்துள்ளது.
A labourer was killed while seven others were injured when a portion of a bridge under construction near Masiyana village here collapsed on Friday, authorities said.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.