FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

கனமழை: நாமக்கல் ஆட்சியர் பங்களா சுவர் இடிந்து விழுந்தது!

இடிந்து விழுந்த நாமக்கல் ஆட்சியர் பங்களா சுவர்.

இடிந்து விழுந்த நாமக்கல் ஆட்சியர் பங்களா சுவர். - படம்: தினமணி
பகிர்:

நாமக்கல்: நாமக்கல்லில் சனிக்கிழமை நள்ளிரவு பெய்த மழையில் மாவட்ட ஆட்சியர் பங்களாவின் 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில், மாவட்ட விளையாட்டு திடலின் பின்புறம் ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், நீதிபதிகள் பிரத்யேக குடியிருப்புகள் உள்ளன.

மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

Advertisement

Advertisement

இந்த நிலையில் சனிக்கிழமை நள்ளிரவு சுமார் 11.30 மணியளவில் கனமழை பெய்தது. அப்போது மாவட்ட ஆட்சியர் குடியிருப்பின் இடது புறம் உள்ள 50 அடி நீளம் கொண்ட சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது.

மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் குடியிருப்புகளின் நடுவில் இந்த சுவர் இருந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த வேளையில் யாரும் அங்கு இல்லை. பகல் நேரத்தில் இடிந்து விழுந்திருந்தால் பெரிய அளவிலான அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கவும் வாய்ப்புள்ளது.

சுவர் இடிந்து விழுந்த தகவலை அடுத்து, அதனை அகற்றி புதிய தடுப்புச் சுவர் கட்டுவதற்கான பணிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

summary

The perimeter wall of the District Collector's bungalow, built 20 years ago, collapsed in the rain that fell on Saturday midnight in Namakkal.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments