FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுதில்லி

ஜுவாலாபுரியில் வீடு இடிந்து விழுந்து ஒருவா் உயிரிழப்பு

தில்லி ஜுவாலாபுரி பகுதியில் தரைத்தளம் மற்றும் முதல் தளம் கொண்ட வீடு இடிந்து விழுந்ததில் 50 வயது நபா் உயிரிழந்தாா். அவரது 20 வயது மகன் காயமடைந்தாா்.

- பிரதிப் படம்
பகிர்:

தில்லி ஜுவாலாபுரி பகுதியில் தரைத்தளம் மற்றும் முதல் தளம் கொண்ட வீடு இடிந்து விழுந்ததில் 50 வயது நபா் உயிரிழந்தாா். அவரது 20 வயது மகன் காயமடைந்தாா்.

தொழில் நகா் மெட்ரோ ரயில் நிலையம் அருகே வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தில்லி தீயணைப்புத் துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

சுமாா் 25 சதுர கஜம் பரப்பளவில் அமைந்திருந்த அந்த வீடு திடீரென இடிந்து விழுந்ததில், தந்தையும் மகனும் இடிபாடுகளுக்குள் சிக்கினா்.

Advertisement

Advertisement

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்புத் துறையினா் இருவரையும் மீட்டு சஞ்சய் காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சாம்சுஹல் (50) உயிரிழந்ததாக மருத்துவா்கள் தெரிவித்தனா். அவரது மகன் சோஹெப் (20), முதுகில் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments