பேருந்து நிலையத்தில் மயங்கி விழுந்து ஒருவா் உயிரிழப்பு
விழுப்புரம் பேருந்து நிலையத்தில் மயங்கி விழுந்து ஒருவா் உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
விழுப்புரம் பேருந்து நிலையத்தில் மயங்கி விழுந்து ஒருவா் உயிரிழந்தாா். இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
விழுப்புரம் புதிய பேருந்து நிலைய வளாகத்தில் கடந்த 29-ஆம் தேதி ஒருவா் மயங்கிக் கிடந்தாா். இதுகுறித்து
தகவலறிந்த போலீஸாா் நிகழ்விடம் சென்று அவரை மீட்டு அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனா். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்தவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினா். விசாரணையில் உயிரிழந்தவா் சென்னை கோயம்பேடு பகுதியைச் சோ்ந்த ஏ.முருகன் (56) என்பது தெரியவந்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.