பெங்களூரு

கூட்டணி அரசைக் கவிழ்க்கும் பா.ஜ.க.வின் கனவு பலிக்காது

DIN

கர்நாடகத்தில் கூட்டணி அரசைக் கவிழ்க்கும் பா.ஜ.க.வின் கனவு பலிக்காது என்று அந்த மாநில துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார்.
தும்கூரில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது:  கர்நாடகத்தில் ஆட்சியில் அமர்ந்துள்ள கூட்டணி அரசைக் கவிழ்க்கும் முயற்சியில் பா.ஜ.க.வினர் ஈடுபட்டு வருகின்றனர்.  பாஜக என்ன முயற்சி செய்தாலும், கூட்டணி அரசைக் கவிழ்க்க முடியாது.  கர்நாடக காங்கிரஸ்- ம.ஜ.த. கூட்டணி அரசு 5 ஆண்டுகளை முழுமையாக நிறைவு செய்யும்.
அரசைக் கவிழ்க்கும் பா.ஜ.க.வின் கனவு ஒரு போதும் பலிக்காது.  மாநிலத்தில் எதிர்க்கட்சியில் அமர்ந்துள்ள பா.ஜ.க., தனது பணியைச் சரிவரச் செய்யாமல், அரசியலில் குழப்பத்தையும்,  கொந்தளிப்பையும் உருவாக்கி வருகிறது.  காங்கிரஸ், ம.ஜ.த. கட்சிகளிடையே எந்தவிதப் பிளவும் இல்லை. அனைவரும் ஒற்றுமையாகப் பணியாற்றி வருகிறோம். காங்கிரஸ் கட்சிக்குள் உட்கட்சி பூசல் உள்ளது போல் சூழலை உருவாக்க பா.ஜ.க.  முயற்சிக்கிறது.  அவர்கள் என்ன முயன்றாலும்,  அரசு அமைதியாக ஆட்சியை நடத்தும். பா.ஜ.க.வின் ஆசை வார்த்தைகளுக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யாரும் விலைபோக மாட்டார்கள் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

SCROLL FOR NEXT