பெங்களூரு

"சமூக நீதி அடிப்படையில் அமைச்சர் பதவி வழங்க வேண்டும்'

DIN

சமூக நீதி அடிப்படையில் அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் பி.டி.பரமேஸ்வர்நாயக் தெரிவித்தார்.
இதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: கர்நாடக மாநிலம், பல்லாரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் 6 பேர் எம்.எல்.ஏ.க்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளோம். அதில் ஒருவரைக் கூட அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளவில்லை என்பது எங்களுக்கு வேதனையாக உள்ளது. விரைவில் நடைபெற உள்ள அமைச்சரவை விரிவாக்கத்தில் சமூக நீதி அடிப்படையில் எங்கள் மாவட்டத்தைச் சேர்ந்த 6 பேரில் ஒருவருக்கு அமைச்சர் பதவியை வழங்க வேண்டும்.
காங்கிரஸ் கட்சியில் 6 பேரை வெற்றிபெறச் செய்த எங்கள் மாவட்டத்தில் ஒருவருக்குக் கூட அமைச்சராக வாய்ப்பு வழங்காதது, எங்கள் மாவட்ட மக்களை வேதனை அடையச் செய்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மேலிடத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். அவர்கள் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர். அமைச்சரவை விரிவாக்கத்தின் போது கட்சியின் மேலிடம் எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு கட்டுப்படுவேன் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

குரல் குளோனிங் மூலம் பண மோசடி: சைபா் குற்றப்பிரிவு எச்சரிக்கை

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

SCROLL FOR NEXT