பெங்களூரு

இட ஒதுக்கீடு: பயனாளிகளை முடிவு செய்ய உயர்நிலை குழு தேவை: எம்பி சீனிவாஸ்பிரசாத்

DIN

இட ஒதுக்கீட்டின் பயனாளிகளை முடிவு செய்ய உயர்நிலைக் குழுவை மத்திய அரசு அமைப்பது அவசியம் என்றார் பாஜக எம்.பி. சீனிவாஸ்பிரசாத்.
மைசூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இடஒதுக்கீடு தொடர்பான கருத்தரங்கில் அவர் பேசியது: இடஒதுக்கீடு என்ற கருத்தியல் தற்போது நீர்த்துப்போக செய்துவிட்டனர். இடஒதுக்கீடு, அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்ற கருத்து உள்ளதாக குழப்பம் ஏற்பட்டுள்ளது. இட ஒதுக்கீடு குறித்த மறுவரையறை செய்வதற்கு மத்திய அரசு குழு அமைக்க வேண்டும். இட ஒதுக்கீட்டின் பயனாளிகளை முடிவு செய்ய உயர்நிலைக் குழுவை மத்திய அரசு அமைப்பது அவசியமாகும்.

இட ஒதுக்கீட்டின் வரம்புக்குள் யார் வரவேண்டும்? யாருக்கு இட ஒதுக்கீடு அளிக்கவேண்டும் என்பதை வரையறுக்க வேண்டும். அப்போதுதான் ஒடுக்கப்பட்டோருக்கு இடஒதுக்கீட்டின் பயன் சென்றடையும். ஜாதிகளுக்கு அளிக்கப்படும் இடஒதுக்கீடு வசதியை உள் ஜாதியினருக்கு எப்படி பிரித்தளிக்க இயலும். உள் இடஒதுக்கீட்டை நான் கடுமையாக எதிர்க்கிறேன். உள் இடஒதுக்கீட்டுக்கு அரசியலமைப்புச்சட்டத்தில் இடமில்லை. உள் இடஒதுக்கீடுக்கான கோரிக்கையே இடஒதுக்கீடு தொடர்பான தற்போதைய குழப்பத்துக்கு  காரணமாகும். தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் பிரிவில் புதிய ஜாதிகள் சேர்க்கப்படுகின்றன.

சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலிலும், வனப்பகுதிகளில் வசிப்போரை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கவும்தான் அரசியலமைப்புச் சட்டம் வலியுறுத்தியுள்ளது. தனியார் நிறுவனங்களிலும், மாநிலங்களவைக்கான தேர்தலிலும் இடஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிஎன்ஏ போஸ்டர்!

இளவரசிகள்..

டி20 உலகக் கோப்பைக்குத் தயாராக ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு தேவை: முன்னாள் ஆஸி. கேப்டன்

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

SCROLL FOR NEXT