பெங்களூரு

108 காவல் நிலையங்களில் மக்கள் பங்களிப்பு காவல் திட்டம் அறிமுகம்

DIN

கர்நாடகத்தில் 108 காவல் நிலையங்களில் மக்கள் பங்களிப்பு காவல் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தி காவல் உயரதிகாரிகள் பேசினர். 2013-ஆம் ஆண்டு ஜனக்கிரஹா தொண்டு நிறுவனத்துடன் இணைந்து மக்கள் பங்களிப்பு காவல் திட்டத்தை 6 காவல் நிலையங்களில் தொடங்கப்பட்டது.  அதைத் தொடர்ந்து 2 ஆண்டுகளில் இந்தத் திட்டம் 18 காவல் நிலையங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டது. இந்தத் திட்டத்தில் போலீஸாருடன், பொதுமக்களும் இணைந்து செயல்படுவார்கள். இந்த திட்டத்தை தற்போது 108 காவல் நிலையங்களுக்கு விரிவாக்கம் செய்துள்ளோம். ஏற்கெனவே இந்த திட்டத்தில் 600 பொதுமக்கள், 1,800 போலீஸார் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் 15 ஆயிரத்திற்கும் அதிகமான இல்லங்கள், கடைகளில் உள்ளவர்களையும், 620 லேஅவுட்டில் வசிப்பவர்களை சந்தித்து, இந்த திட்டம் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 1,500 பள்ளி, கல்லூரிகளுக்கு இந்த திட்டம் தொடர்பான தகவல்கள் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில் திருட்டு, கொள்ளை, வழிப்பறி, சட்டம்- ஒழுங்கு உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெறாமல் தடுப்பது குறித்து அறிவுறுத்தப்படுகிறது. மாநகரக் காவல் ஆணையர் சுனில்குமார், ஓய்வுபெற்ற காவல் அதிகாரிகள் எஸ்.டி.ரமேஷ், தாரகன், ஜேகப் பொன்னூஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தானில் நீட் வினாத்தாள் கசிந்ததா? தேசிய தேர்வு முகமை விளக்கம்

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

SCROLL FOR NEXT