பெங்களூரு

"கல்வி முறையில் பல மாற்றங்கள் நிகழும்'

DIN

எதிர்காலத்தில் கல்வி முறையில் பல மாற்றங்கள் நிகழும் என்று மத்திய அரசின் முன்னாள் பள்ளி கல்வித் துறை செயலாளர் அனில் ஸ்வரூப் தெரிவித்தார்.
பெங்களூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்வித் துறையில் சிறந்த சேவை புரிந்தமைக்காக அனில் ஸ்வரூப்புக்கு பட்டம் வழங்கி கிடோவேட்டர்ஸ் கல்வி அமைப்பின் சார்பில் கெளரவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் அவர் பேசியது: கடந்த காலங்களை ஒப்பிடுகையில் பள்ளிக் கல்வியில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. என்றாலும் எதிர்காலத்தில் கல்வித் துறையில் இன்னும் பல மாற்றங்கள் நிகழும். எனவே, அதற்கு ஏற்ற வகையில் மாணவர்களைத் தயார்படுத்த வேண்டும். படைப்புத் திறன்களில் மாணவர்களை சிறந்தவர்களாக உருவாக்கும் வகையில் கல்வி முறையில் மாற்றம் இருக்கும் என நம்புகிறேன் என்றார். 
நிகழ்ச்சியில் கிடோவேட்டர்ஸ் கல்வி அமைப்பின் நிறுவனர் பிரியாதீப், சந்திரசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தலைமைச் செயலகம் படத்தின் டீசர்

தேர்தலில் வாக்களிக்காதது ஏன்?: ஜோதிகா விளக்கம்!

கண் அழைக்குது..!

ஐசிசி தரவரிசை வெளியீடு: டெஸ்ட்டில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி ஆஸ்திரேலியா முதலிடம்!

புதிய 400சிசி இருசக்கர வாகனத்தை அறிமுகப்படுத்தியது பஜாஜ்!

SCROLL FOR NEXT