பெங்களூரு

இருவேறு விபத்துகளில் 2 பேர் பலி

DIN

விபத்தில் முதியவர் இறந்தார்.
பெங்களூரு ஜே.பி.நகரைச் சேர்ந்த திப்பராஜ் (75),   கடைகளுக்கு உணவுப் பொருள்களை விநியோகம் செய்து வந்தார்.
இவர் புதன்கிழமை மாலை தனது மகன் சுரேஷ் சந்திரா ஓட்டிச் சென்ற மினி சரக்கு வாகனத்தில் சென்றுள்ளார்.
அரவிந்தா சதுக்கத்தில் எதிரே சென்ற சிமென்ட் கலவை லாரி மீது கட்டுப்பாட்டை இழந்த மினி சரக்கு வாகனம் மோதியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த திப்பராஜ் மருத்துவமனையில் உயிரிழந்தார். காயமடைந்த சுரேஷ்சந்திரா சிகிச்சைக்காக அனுமதிக்கப்
பட்டுள்ளார். 
இதுகுறித்து ஜெயநகர் போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்: கலபுர்கி மாவட்டத்துக்குள்பட்ட சேடம் அருகேயுள்ள குக்குன்டா பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் (26). 
இவர் வியாழக்கிழமை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, சேடம் சாலை மதிஹாளா தண்டா அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதியது. 
இதில் பலத்த காயமடைந்த சிவக்குமார் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.  இதுகுறித்து கலபுர்கி போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

விவசாயிகளுக்கு வேளாண்மைக் கல்லூரி மாணவிகள் செய்முறை விளக்கம்

SCROLL FOR NEXT