பெங்களூரு

சாலையோர மரங்களைப் பாதுகாக்க வேண்டும்: சாலுமரத திம்மக்கா

DIN

சாலையோரங்களில் நடப்படும் மரங்களைப் பாதுகாக்க அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று பத்மஸ்ரீ பட்டம் பெற்றவரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான சாலுமரத திம்மக்கா தெரிவித்தார்.
பெங்களூரில் வெள்ளிக்கிழமை செளபர்ணிகா அறக்கட்டளை சார்பில் 10 ஆயிரம் மரக் கன்றுகளை நடுவதற்கான அறிமுக விழாவில் கலந்து கொண்டு அவர் பேசியது: சுற்றுச்சூழலுக்கு மரங்கள் உற்ற நண்பனாகும். ஆனால், சாலைகளை அகலப்படுத்துவதற்காக மரங்களை வெட்டுவது சர்வசாதாரணமாகியுள்ளது. ஆனால், வெட்டும் மரங்களுக்கு இரு மடங்காக மரங்களை நட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடப்பட்ட மரங்களை பாதுகாக்கவும் அதிக கவனம் செலுத்த வேண்டும். மரங்களைப் பாதுகாக்கத் தவறினால், எதிர்காலத்தில் மழையின்றி, வறட்சியால் நாம் பாதிக்கப்படுவோம். மரத்தின் அவசியத்தை கருத்தில் கொண்டு செளபர்ணிகா அறக்கட்டளையின் நிகழாண்டு 10 ஆயிரம் மரக்கன்றுகளை நட முடிவு செய்து, அதனை செயல்படுத்தும் பொறுப்பினை என்னிடம்
வழங்கியுள்ளனர். 
மரங்களை நடுவதற்கான ஆர்வம் என்னிடமுள்ளதால், அந்த பொறுப்பை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்கிறேன். மரங்களைப் பாதுகாப்பதில் ஆர்வம் காட்டும் இளைஞர்கள் முதியவர்கள், சிறுமிகள், குழந்தைகளின் பாதுகாப்பிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றார். 
நிகழ்ச்சியில் சமூக நல ஆர்வலர்கள் அனந்தலட்சுமி, ஊர்மிளாசனான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

SCROLL FOR NEXT