பெங்களூரு

மாநகரப் பேருந்து கவிழ்ந்ததில் நடத்துநர் உள்பட 13 பேர் காயம்

மாநகரப் பேருந்து கவிழ்ந்ததில் நடத்துநர் உள்பட 13 பயணிகள்  காயமடைந்துள்ளனர் .

DIN

மாநகரப் பேருந்து கவிழ்ந்ததில் நடத்துநர் உள்பட 13 பயணிகள்  காயமடைந்துள்ளனர் .
பெங்களூரு காவல்பைர சந்திராவிலிருந்து மாகடிசாலை வீட்டுவசதி காலனிக்கு சென்ற 180 எண் கொண்ட மாநகரப் பேருந்து, புதன்கிழமை காலை 10.45 மணியளவில் ராஜாஜிநகர் முதலாவது பிளாக்கில் உள்ள மேம்பாலத்தில் வேகமாக சென்று ஏற முயன்றது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலைத் தடுப்புசுவரில் மோதி, மேம்பாலத்திலிருந்து கீழே விழுந்துள்ளது.
இதில் பயணிகள் சுஷ்மிதா (23), அம்பிகா (30), சிக்கேகெளடா (45), கமலா (44), ஜெய்குமார் (45), பேருந்து நடத்துனர் விஜயகுமார் (52), மோகன் (72), நரசப்பா (54), தர்ஷன் (19), ஹரன்மெளஜி (62), பிரபாகர் (25), கிருஷ்ணமூர்த்தி (50) உள்ளிட்ட 13 பேர் காயமடைந்தனர். இவர்களில் 5 பேர் மல்லேஸ்வரத்தில் உள்ள அரசு மருத்துவமனையிலும், மற்றவர்கள் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.
காவல் துணை ஆணையர் செளம்யலதா, எம்.எல்.ஏ கோபாலையா ஆகியோர் சம்பவ இடத்தை ஆய்வு செய்தனர். இதுகுறித்து மல்லேஸ்வர போக்குவரத்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றன்றனர்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

அர​வணை மேல் பள்ளி கொண்ட முகில் வண்​ணன்

வார பலன்கள் - மீனம்

SCROLL FOR NEXT