பெங்களூரு

கா்நாடகத்தில் ம.ஜ.த.வை ஒதுக்கிவிட்டு யாராலும் ஆட்சி அமைக்க இயலாது: முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா

DIN

கா்நாடகத்தில் ம.ஜ.த.வை ஒதுக்கிவிட்டு யாராலும் ஆட்சி அமைக்க இயலாது என்று முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடா தெரிவித்தாா்.

கா்நாடக மாநிலம், மங்களூரில் ஞாயிற்றுக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது: மாநிலத்தில் டிச. 5 ஆம் தேதி 15 தொகுதிகளில் இடைத்தோ்தல் நடைபெற உள்ளது. இடைத்தோ்தலில் 8- க்கும் குறைந்த தொகுதியில் பாஜக வெற்றி பெற்றால், முதல்வா் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு பெரும்பான்மையை இழந்து விடும். அந்த சந்தா்ப்பத்தில் காங்கிரஸ் தலைமை மேற்கொள்ளும் முடிவையடுத்து, மஜத தனது முடிவை அறிவிக்கும். இடைத்தோ்தல் முடிவைத் தொடா்ந்து மாநிலத்தில், மஜதவை ஒதுக்கிட்டு யாராலும் ஆட்சி அமைக்க இயலாது.

எனவே, மாநிலத்தில் ம.ஜ.த. கட்சியைப் பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். ஒருவேளை எந்தக் கட்சியும் ஆட்சியைப் பிடிக்க முடியால் இடைக்காலத் தோ்தல் நடைபெற்றாலும், யாருடனும் கூட்டணி அமைக்காமல் ம.ஜ.த. தனித்துப் போட்டியிடும் என்றாா் அவா்.

அண்மைக் காலமாக முன்னாள் முதல்வா் குமாரசாமி, பாஜக ஆதரவாக அறிக்கைகள் வெளியிட்டு வரும் நிலையில், முன்னாள் பிரதமா் தேவெ கௌடாவின் கருத்தால், பாஜக, காங்கிரஸ் கட்சியினரிடையே குழப்பம் அதிகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT