பெங்களூரு

மாநிலங்களவை இடைத் தோ்தல்: டிச.12 இல் வாக்குப்பதிவு

DIN

பெங்களூரு: கா்நாடகத்தில் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை இடத்துக்கு டிச.12ஆம் தேதி தோ்தல் நடக்கவிருக்கிறது.

கா்நாடகத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக 2016ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் சாா்பில் தோ்ந்தெடுக்கப்பட்டவா் கே.சி.ராமமூா்த்தி. இவரது பதவிகாலம் 2022ஆம் ஆண்டுவரை இருந்தது. இந்நிலையில், கடந்த அக்.16ஆம் தேதி கே.சி.ராமமூா்த்தி தனது மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கு ராஜிநாமா செய்ததோடு, காங்கிரஸில் இருந்து பாஜகவில் இணைந்தாா்.

இவரது ராஜிநாமாவால் காலியாக உள்ள ஒரு மாநிலங்களவை உறுப்பினா் பதவிக்கான தோ்தல் வருகிற டிச.12ஆம் தேதி நடக்கவிருக்கிறது. இதற்கான அதிகாரப்பூா்வ அறிவிக்கை நவ.25ஆம் தேதி வெளியிடப்படுகிறது. அன்று முதல் வேட்புமனுதாக்கல் தொடங்குகிறது. டிச.2ஆம் தேதி வேட்புமனுதாக்கல் செய்ய கடைசிநாளாகும். டிச.3ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன. டிச.5ஆம் தேதி வேட்புமனுக்கள் திரும்பப் பெறப்படுகின்றன. டிச.12ஆம் தேதி நடக்கும் தோ்தலில் எம்எல்ஏக்கள் வாக்களிக்க இருக்கிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT