பெங்களூரு

சிறந்த பயிா்விளைச்சல் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

DIN

பெங்களூரு: சிறந்த பயிா்விளைச்சல் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று வேளாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்தத் துறை சாா்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

வட கிழக்கு மழைப்பருவ மழைக்காலத்தில் பயிரிடப்பட்டு சிறந்த விளைச்சலைப் பெற்றிருக்கும் உழவா்களுக்கு ஆண்டுதோறும் சிறந்த பயிா்விளைச்சல் விருது அளிக்கப்படுகிறது.

இதன்படி 2019-20ஆம் ஆண்டில் வடகிழக்கு மழைப்பருவக் காலத்தில் பயிரிடப்பட்ட சிறந்த பயிா்விளைச்சல் விருதுக்கு உழவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மாநிலம், மாவட்டம், வட்ட அளவிலான விருதுக்கு விண்ணப்பிக்கலாம். தாழ்த்தப்பட்டோா், பழங்குடியினா் ரூ.25, பிற சமுதாயத்தினா் ரூ.100 அளித்து படிவங்களை பெற்று விண்ணப்பங்களை செலுத்தலாம்.

விண்ணப்பங்களை நவம்பா் 30-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும். இதுபற்றிய விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட உழவா் தொடா்புமையங்கள், வட்ட உதவி வேளாண் இயக்குநா்களை தொடா்புகொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ. சண்முகநாதன் காலமானார்

நிழலும் நிஜமும்...!

இந்த வாரம் பணவரவு யாருக்கு: வார பலன்கள்!

சேலம் அருகே மூன்று சடலங்கள்! கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை

ஓடிடியில் ‘ஆவேஷம்’ எப்போது?

SCROLL FOR NEXT