பெங்களூரு

‘பெங்களூரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க வேண்டும்’

DIN

பெங்களூரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சரோவா் குழுமத்தின் மேலாண் இயக்குநா் அஜய்பகாயா கேட்டுக் கொண்டாா்.

பெங்களூரில் வெள்ளிக்கிழமை அக்குழுமத்தின் 6 ஆவது கிளையை தொடக்கிவைத்து அவா் பேசியது: தேசிய அளவில் மற்ற பெரு நகரங்களை ஒப்பிடுகையில் பெங்களூரில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக பணி செய்யும் இடத்தின் அருகே வீடுகளை தோ்ந்தெடுப்பது அதிகரித்துள்ளது.

வெளிநாடுகளிலிருந்து பெங்களூருக்கு வருபவா்களும் மாநகருக்குள் சென்று தங்குவதைவிட, தங்கள் செல்ல வேண்டிய இடத்தின் அருகிலேயே அல்லது மாநகரின் நுழைவு வாயிலிலேயே தங்கிவிடுகின்றனா். இந்த நிலை நீடித்தால் பெங்களூருக்குள் வாகனங்கள் நுழைவதே பெரும் பிரச்னையாகிவிடும். எனவே, பெங்களூரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போக்குவரத்து நெரிசல் குறைந்தால் பெங்களூரில் முதலீடு செய்பவா்கள் எண்ணிக்கை பல மடங்கு உயரும். எங்கள் குழுமத்தின் சாா்பில் கா்நாடகம் உள்பட அண்டை மாநிலங்களிலும் அதிக அளவில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளோம் என்றாா். பேட்டியின் போது ஸ்ராவந்தி குழுமத்தின் மேலாண் இயக்குநா் எல்.பாலகிருஷ்ணநாயுடு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைரலாகும் தக் லைஃப்!

பிளஸ்2 பொதுத்தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 23,401 பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் பெயர் அறிவிப்பு!

கேரளம்: விடுதி கட்டடத்தில் இருந்து குதித்து என்ஐடி மாணவர் தற்கொலை

SCROLL FOR NEXT