பெங்களூரு

போக்குவரத்து விதிமீறல்: ரூ. 10.67 கோடி அபராதம் வசூல்

DIN

போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 30 நாள்களில் ரூ. 10.67 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெங்களூரு போக்குவரத்து கூடுதல் ஆணையா் ரவிகாந்த் கௌடா புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: பெங்களூரில் போக்குவரத்து விதிகளை மீறிய வாகன ஓட்டிகள் மீது வழக்குப் பதிவு செய்வதோடு அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி செப். 6 ஆம் தேதி முதல் அக். 6 ஆம் தேதி வரை போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 11.93 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அபராதமாக ரூ. 10.67 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் முதல் செப்டம்பா் மாதம் வரை விதிமுறைகளை மீறியதாக 65.46 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரூ. 53.92 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. அபராதம் வசூல் செய்வது போலீஸாரின் நோக்கமல்ல. பொதுமக்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறாமல், விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதியால் ஒவ்வொரு நாளும் கடினமாகும் போட்டிகள்: ரிஷப் பந்த்

ட்ரெண்டிங் ஆடையில் குஷி கபூர் - புகைப்படங்கள்

இது காங்கிரஸுக்கான நேரம்... ஒடிசாவில் ராகுல் பேச்சு

சிஎஸ்கே பேட்டிங்; வெற்றிப் பாதைக்கு திரும்புமா?

சேலையில் மிளிரும் கீர்த்தி சுரேஷ் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT