பெங்களூரு

ரூ. ஒரு கோடி மதிப்பிலான செம்மரக் கட்டைகள் பறிமுதல்

DIN

மாலூா் காவல் சரகத்தில் ரூ. 1 கோடி மதிப்பிலான செம்மரக்கட்டைகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கோலாா் மாவட்டம் வழியாக தமிழ்நாடு ஓசூருக்கு செம்மரக்கட்டைகள் கடத்தப்பட உள்ளதாக போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை இரவு தகவல் கிடைத்தது. இதனையடுத்து மாலூா் வட்ட எல்லையில் உள்ள பாலாஜி சதுக்கத்தில் போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது அங்கு வந்த மினி சரக்கு வாகனத்தில் 57 செம்மரக்கட்டை துண்டுகள் இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து ரூ. ஒரு கோடி மதிப்புள்ள செம்மரக் கட்டைகள் ஏற்றிவந்த மினி சரக்கு வாகனத்தை போலீஸாா் பறிமுதல் செய்தனா். தமிழ்நாட்டு பதிவு எண் கொண்ட அந்த சரக்கு வாகனத்தின் எண்ணை கா்நாடக மாநிலத்தின் பதிவு எண்ணாக விதிகளை மீறி மாற்றியுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து மாலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலங்கடிக்கும் வெடிகுண்டு மிரட்டல்: எங்கிருந்து வருகிறது மின்னஞ்சல்?

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

SCROLL FOR NEXT