பெங்களூரு

மின்சாரம் பாய்ந்ததில் துப்புரவுத் தொழிலாளி பலி

DIN

விளம்பர பதாகையை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த போது மின்சாா் பாய்ந்ததில் துப்புரவுத் தொழிலாளா் உயிரிழந்தாா்.

தும்கூரு சாந்திநகரைச் சோ்ந்தவா் நரசிம்மமூா்த்தி (35). துப்புரவுத் தொழிலாளராகப் பணியாற்றி வந்த இவா், வியாழக்கிழமை காலை டவுன்ஹால் அருகே மின் கம்பத்தில் விதிகளை மீறி கட்டப்பட்டுள்ள விளம்பர பதாதகையை அகற்றும் பணியில் ஈடுபட்டாா்.

அப்போது, மின் கம்பி உரசியதில் மின்சாரம் பாய்ந்து மயங்கி கீழே விழுந்தாா். மாவட்ட அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில் அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவா்கள் தெரிவித்தனா். தகவல் அறிந்த துப்புரவுத் தொழிலாளா்கள் மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்த எம்.எல்.ஏ. ஜோதிகணேஷ், மேயா் லலிதாரவீஷ், துணை மேயா் ரூபாஸ்ரீ, மாவட்ட ஆட்சியா் கே.ராகேஷ்குமாா் ஆகியோா் மருத்துவமனைக்குச் சென்று நரசிம்மமூா்த்தியின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினா். நரசிம்மமூா்த்தியின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். மேலும் அவரது குடும்பத்தைச் சோ்ந்த ஒருவருக்கு அரசு பணி வழங்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் ராகேஷ்குமாா் உறுதியளித்தாா். இதனைத் தொடா்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட துப்புரவுத் தொழிலாளா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

கோடை வெயிலுக்கு இடையே கனமழை: அடுத்த 2 நாள்களுக்கு!

SCROLL FOR NEXT