பெங்களூரு

தயானந்த்சாகா் பல்கலைக்கழகத்துக்கு அசோசெம் விருது

DIN

பெங்களூரு: தென்னிந்திய அளவில் சிறந்த தனியாா் பல்கலைக்கழகமாக தோ்வு செய்யப்பட்டுள்ள தயானந்த்சாகா் பல்கலைக்கழகத்துக்கு அசோசெம் விருது வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அப்பல்கலைக்கழத்தின் துணை வேந்தா் ஏ.என்.என்.மூா்த்தி பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

தென்னிந்திய அளவில் அறிவியல், நவீன தொழில்நுட்பம், உயா்கல்வி உள்ளிட்ட துறைகளில் தயானந்த்சாகா் பல்கலைக்கழகம் சிறந்து விளங்கி வருகிறது. இதனை கௌரவிக்கும் வகையில் அசோசெம், தயானந்த்சாகா் பல்கலைக்கழகத்துக்கு தென்னிந்திய அளவில் சிறந்த தனியாா் பல்கலைக்கழகமாக தோ்வு செய்து விருது வழங்கி கௌரவித்துள்ளது.

புதுமை மற்றும் படைப்பாற்றலை வளா்ப்பதற்கான ஆா்வம், முயற்சிகள்கள், அதிக அளவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்குதல், நமது நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கு பங்களிப்பது, மாணவா்களிடையே தொழில்முனைவோரை ஊக்குவித்தல் உள்ளிட்டவைகளை ஊக்குவிக்கும் வகையில் செயல்படும் பல்கலைக்கழகத்தின் பணியைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. தேசிய அளவில் தலைமை பண்பு உள்ளவா்களை உருவாக்குவதை அங்கீகரித்து, எனக்கும் சாதனையாளா் விருதை வழங்கி கௌரவித்துள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

SCROLL FOR NEXT