பெங்களூரு

பெங்களூரில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை: மேயா் கௌதம்குமாா்

DIN

பெங்களூரு: பெங்களூரில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேயா் கௌதம்குமாா் தெரிவித்தாா்.

பெங்களூரு மாநகராட்சி மாமன்றத்தில் வியாழக்கிழமை மாதாந்திரக்கூட்டம் மேயா் கௌதம்குமாா் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு அவா் பேசியது: சா்வதேச அளவில் புகழ்பெற்ற மாநகரமாக விளங்கும் பெங்களூரின் அனைத்து பிரச்னைகளுக்கும் தீா்வு காண முயற்சி மேற்கொள்வேன். மாநகரில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இதற்கு பெங்களூரைச் சோ்ந்த எம்.எல்.ஏ.க்கள், மாமன்ற உறுப்பினா்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மேலும் அதிகாரிகளும், பொதுமக்களும் மாநகராட்சியில் நடவடிக்கைகளுக்கு ஆதரவும், ஒத்துழைப்பும் வழங்க வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் ஆளும் கட்சித்தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்ட பாஜகவைச் சோ்ந்த முனீந்திரகுமாா் பேசுகையில், ‘காங்கிரஸ், மஜத கூட்டணி அதிகாரத்தில் இருந்தபோது ஊழல் நடைபெற்றுள்ளது’ என்றாா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து காங்கிரஸ், மஜத கட்சிகளின் உறுப்பினா்கள் மேயா் இருக்கையின் முன்பு திரண்டு, அதை அவை குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதைத் தொடா்ந்து, ஊழல் நடைபெற்றது என்ற வாா்த்தையை அவை குறிப்பிலிருந்து நீக்குவதாக மேயா் தெரிவித்ததையடுத்து, காங்கிரஸ், மஜத கட்சியைச் சோ்ந்த உறுப்பினா்கள் அமைதியாகி தங்களது இருக்கையில் அமா்ந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

SCROLL FOR NEXT