பெங்களூரு

"3 ஆண்டுகளில் ரூ.300 கோடிக்கு தொழில் முதலீடு இலக்கு'

DIN

அடுத்த 3 ஆண்டுகளில் ரூ. 300 கோடிக்கு இந்தியாவில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக டேப்ளஸ் மேலாண் இயக்குநர் அதீப் அகமது தெரிவித்தார்.
 பெங்களூரில் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியது: சீன நாட்டை தலைமையிடமாக கொண்டு செயல்படும் யோயோúஸா குழுமத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு, பெங்களூரில் வெள்ளிக்கிழமை 2 சில்லறை வணிக கிளையை தொடங்க உள்ளோம். இந்த கிளைகளில் ரூ. 65 முதல் ரூ. 2 ஆயிரம் வரையிலான 5 ஆயிரம் பொருள்கள் விற்பனை செய்யப்படும். இதைத் தொடர்ந்து மங்களூரு, காசியபாத், புணே உள்ளிட்ட 5 நகரங்களில் எங்கள் கிளைகளை தொடங்க முடிவு செய்துள்ளோம்.
 அடுத்த 3 ஆண்டுகளில் ரூ. 300 கோடி அளவில் இந்தியாவில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளோம். பெரு நகரங்களைத் தொடர்ந்து இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களிலும் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளோம். இதனால் பல ஆயிரம் இளைஞர்கள், பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது. பொருளாதாரம் தேக்கமடைந்துள்ள நிலையில் நம்பிக்கையோடு எங்கள் முயற்சியை தொடங்கிள்ளோம் என்றார். பேட்டியின் போது, யோயோúஸா குழுமத்தின் இணை நிறுவனரும், இயக்குநருமான வென்லிங்க்ஜியே உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT