பெங்களூரு

"தண்ணீர் சேமிக்க பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்'

DIN

தண்ணீரை சேமிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என இந்திய குழாய் அமைப்போர் சங்கத்தின் தேசியத் தலைவர் குருமித்சிங் அரோரா தெரிவித்தார்.
 பெங்களூரில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்திய குழாய் அமைப்போர் சங்கத்தின் 26ஆவது மாநாடு அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் பேசியது: தேசிய அளவில் தண்ணீர் பிரச்னை அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெங்களூரில் நிலத்தடி நீரின் அளவு குறைந்து வருவதால், காவிரி நீரையை எதிர்ப்பார்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மழை பொய்த்தால் காவிரியிலிருந்து வரும் தண்ணீர் குறைவதால், குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படுகிறது.
 எனவே, பெங்களூரு உள்ளிட்ட அனைத்து நகரங்களிலும் மழை நீர், தண்ணீரை சேமிப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மழைநீரை சேமிப்பது மட்டுமின்றி, பயன்படுத்தும் தண்ணீரை மறுசுழற்சி செய்து, மரம், செடிக்களுக்கு பாய்ச்சவும், வீடு, வாகனங்கள் உள்ளிட்டவையை கழுவுவதற்கும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
 தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டால் அதனை உற்பத்தி செய்ய முடியாது என்பதனை அனைவரும் உணரவேண்டும். பெங்களூரு அரண்மனைத் திடலில் அக்டோபர் 11, 12 ஆம் தேதிகளில் இந்திய குழாய் அமைப்போர் சங்கத்தின் மாநாடு நடைபெறும். அதில் கட்டடங்களில் அமைக்கப்படும் குழாய்களில் தண்ணீர் கசியாமல் இருப்பது குறித்தும், தண்ணீர் சேமிப்பு குறித்து விவாதிக்கப்படும். அடுக்குமாடிக் குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டடங்களில் தண்ணீரை சேமிக்கும் வகையில் குழாய்கள் அமைப்பது குறித்தும், கட்டுமானங்கள் குறித்து கிரடாய் அமைப்புடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளோம் என்றார்.
 நிகழ்ச்சியில் இந்திய குழாய் அமைப்போர் சங்கத்தின் தேசியச் செயலாளர் சி.எஸ்.குப்தா, பெங்களூரு கிளையின் தலைவர் பிரசன்னக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறை: மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் தீர்ப்பு

பாதுகாப்புப் படையினருடன் மோதல்: சத்தீஸ்கரில் 3 பெண்கள் உள்பட 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

தேர்தல் நேரத்தில் கேஜரிவால் கைது ஏன்?: அமலாக்கத் துறையிடம் உச்சநீதிமன்றம் கேள்வி

இன்றுமுதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதுப்பிக்கப்பட்ட வாகன நிறுத்தக் கட்டணம்

வட தமிழக உள் மாவட்டங்களில் 3 நாள்கள் வெப்ப அலை வீசும்

SCROLL FOR NEXT