பெங்களூரு

பயணச்சீட்டில்லா பயணம்: சோதனையில் ரூ.7.57 லட்சம் அபராதம் வசூல்

 பயணச் சீட்டில்லாமல் பயணம் செய்தவர்களை சோதனை செய்து, அவர்களிடமிருந்து அபராதமாக ரூ.7.57 லட்சம் வசூலிக்கப்பட்டது.

DIN


 பயணச் சீட்டில்லாமல் பயணம் செய்தவர்களை சோதனை செய்து, அவர்களிடமிருந்து அபராதமாக ரூ.7.57 லட்சம் வசூலிக்கப்பட்டது.
இதுகுறித்து கர்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மக்களின் நலன்கருதி, கர்நாடகத்தின் அனைத்து பகுதிகளுக்கும், அண்டை மாநிலங்களுக்கும் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த பேருந்துகளில் பயணச்சீட்டு சோதனை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் நடத்தப்பட்டது. 46,718 பேருந்துகளில் சோதனை நடத்தியதில், போக்குவரத்துக் கழகத்துக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக 5,093 சம்பவங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வழக்குப் பதிவுசெய்யப்பட்டன.
இதனடிப்படையில், பயணச்சீட்டில்லாமல் பயணித்த 5,972 பேரிடம் இருந்து ரூ.7,57,958 அபராதமாக வசூலிக்கப்பட்டது. வருவாய் இழப்பு ஏற்படுத்திய ஓட்டுநர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே, பயணிகள் பேருந்தில் பயணிக்கும் போது கட்டணத்தை செலுத்தி தகுதியான பயணச்சீட்டை வைத்துக்கொள்ள வேண்டும் என என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

SCROLL FOR NEXT