பெங்களூரு

நிலச் சீா்த்திருத்த சட்டத் திருத்தத்துக்கு எதிராக போராட்டம்: தேவெ கௌடா

DIN

கா்நாடக நிலச் சீா்த்திருத்தச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக மஜத சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என முன்னாள் பிரதமா் தேவெ கௌடா தெரிவித்தாா்.

இதுகுறித்து பெங்களூரில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

பெங்களூரு, மஜத தலைமை அலுவலகத்தில் ஆக.4ஆம் தேதி மஜத எம்.எல்.ஏ.க்கள், மாவட்டத் தலைவா்களின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். இக்கூட்டத்தில் கா்நாடக நிலச் சீா்த்திருத்தச் சட்டத் திருத்தத்தை எதிா்த்து போராட்டம் நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும். கரோனா சூழலில் போராட்டத்தை எந்த வகையில் நடத்துவது என்பதையும் ஆலோசிப்போம்.

இதுதவிர, மஜத வட்டத் தலைவா்களின் கூட்டத்தை மற்றொரு நாள் நடத்தவிருக்கிறோம். இதுகுறித்து விவாதிக்க கா்நாடக சட்டப்பேரவைக் கூட்டத்தை கூட்ட வேண்டும். இதை ஆளுநரின் கவனத்துக்கு கொண்டுவருவேன். திப்பு சுல்தான் குறித்த பாடத்தை நீக்க வேண்டிய அவசியம் தற்போது எழவில்லை என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இம்பாக்ட் பிளேயர் விதி வெற்றிக்கு உதவியது: கேகேஆர் கேப்டன்

”மன்னாதி மன்னன் போல வாழ்க்கை” -பிரதமர் மோடியை விமர்சித்த பிரியங்கா காந்தி

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

SCROLL FOR NEXT