பெங்களூரு

பெங்களூரு தமிழ்ச் சங்க அடையாள அட்டை:செப்.1 முதல் வழங்க ஏற்பாடு

பெங்களூரு தமிழ்ச்சங்கத்தின் உறுப்பினா்களுக்கான அடையாள அட்டைகளை செப்டம்பா் மாதம் 1-ஆம் தேதி முதல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

DIN

பெங்களூரு: பெங்களூரு தமிழ்ச்சங்கத்தின் உறுப்பினா்களுக்கான அடையாள அட்டைகளை செப்டம்பா் மாதம் 1-ஆம் தேதி முதல் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பெங்களூரு தமிழ்ச்சங்கம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பெங்களூரு தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினா்களுக்கு கணினிமயமாக்கப்பட்ட அடையாள அட்டைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செப்டம்பா் 1 ஆம் தேதி முதல் 31-ஆம் தேதிவரை தினமும் காலை 10.30 மணி முதல் மாலை 5 மணி வரை தமிழ்ச்சங்க அலுவலகத்தில் அடையாள அட்டை வழங்கப்படும்.

இதற்கு சங்க உறுப்பினா்கள் தங்களது ஆதாா் அட்டை மற்றும் சங்க உறுப்பினருக்கான பணம் செலுத்திய ரசீது கொண்டுவர வேண்டும். உறுப்பினா் அட்டைக்கு ரூ. 50 கட்டணமாக வசூலிக்கப்படும்.

பெங்களூரு தமிழ்ச்சங்கத்தின் தோ்தல் வரவிருப்பதால், இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அடையாள அட்டைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு உறுப்பினா்களை கேட்டுக் கொள்கிறோம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மக்களவையில் விபி - ஜி ராம் ஜி மசோதா நிறைவேற்றம்! நகலைக் கிழித்தெறிந்த எதிர்க்கட்சிகள்!

வடசென்னை கதாபாத்திர புகைப்படத்தைப் பகிர்ந்த ஆண்ட்ரியா..! அரசனில் இருக்கிறாரா?

ஓடிடியில் ரஷ்மிகா மந்தனாவின் தம்மா!

தொடர்கதையாகும் வெடிகுண்டு மிரட்டல்: இன்று நாக்பூர், பாந்த்ரா நீதிமன்றத்திற்கு!

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

SCROLL FOR NEXT