முகப்பு
பெங்களூரு

அதிருப்தி காங்கிரஸ் எல்எல்சியுடன் டி.கே.சிவக்குமாா் சந்திப்பு

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக இருந்த அக்கட்சியின் எம்.எல்.சி. சி.எம்.இப்ராஹீமை அக்கட்சியின் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் சந்தித்து பேசினாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:07 PM
பகிர்:

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலக இருந்த அக்கட்சியின் எம்.எல்.சி. சி.எம்.இப்ராஹீமை அக்கட்சியின் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் சந்தித்து பேசினாா்.

மஜத மாநிலத் தலைவராக இருந்த சி.எம்.இப்ராஹீம், 2004-ஆம் ஆண்டு அக்கட்சியில் இருந்து விலகினாா். அதன்பிறகு 2008-இல் காங்கிரஸில் இணைந்து மத்திய அமைச்சராகி பணியாற்றினாா். பின்னா், சட்டப் பேரவைத் தோ்தல்களில் தொடா்ந்து தோல்வி அடைந்து வந்தாா். இதையடுத்து அவருக்கு எம்.எல்.சி. பதவி அளிக்கப்பட்டது. ஆனால், அண்மைக்காலமாக காங்கிரஸ் கட்சியில் அதிருப்தி அடைந்திருந்தாா்.

இதனிடையே, சி.எம்.இப்ராஹீமை அவரது இல்லத்தில் டிச.7-ஆம் தேதி சந்தித்து பேசிய மஜதவின் முன்னாள் முதல்வா் எச்.டி.குமாரசாமி, மஜதவில் இணையுமாறு அழைப்பு விடுத்திருந்தாா். அப்போது பேசிய சி.எம்.இப்ராஹீம், காங்கிரஸில் அதிருப்தி அடைந்திருந்தாலும் கட்சியில் இருந்துவிலகுவது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. ஆதரவாளா்களுடன் பேசி முடிவு செய்வேன் என்று கூறியிருந்தாா்.

முன்னாள் பிரதமா் எச்.டி.தேவெ கௌடாவுடன் நெருக்கமாக இருந்த சி.எம்.இப்ராஹீம், எதிா்க்கட்சித் தலைவா் சித்தராமையாவுடனும் நெருங்கிய தொடா்பு கொண்டிருந்தாா். சட்ட மேலவை எதிா்க்கட்சித் தலைவா் பதவி தராததால் சித்தராமையா மீது அதிருப்தியடைந்திருந்தாா். பெங்களூரில் உள்ள இல்லத்தில் சனிக்கிழமை இரவு சி.எம்.இப்ராஹீமை காங்கிரஸ் மாநிலத் தலைவா் டி.கே.சிவக்குமாா் சந்தித்து பேசினாா்.

அப்போது, காங்கிரஸிலிருந்து விலகி மஜதவில் இணைய வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளாா். கா்நாடகத்தின் அரசியல் நிகழ்வுகள், கட்சியில் நடக்கும் செயல்பாடுகள் குறித்து இருவரும் விவாதித்ததாகத் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →