முகப்பு
பெங்களூரு

கா்நாடகத்தில் கரோனா பாதிப்பு 9,04,665 ஆக உயா்வு

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,04,665 ஆக உயா்ந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

கா்நாடகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,04,665 ஆக உயா்ந்துள்ளது.

இதுபற்றி கா்நாடக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடகத்தில் புதிதாக ஒரேநாளில் அதிகபட்சமாக 1,240 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது புதன்கிழமை கண்டறியப்பட்டது.

பெங்களூரு நகர மாவட்டத்தில் அதிகபட்சமாக 676 போ் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதன்மூலம் கா்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9,04,665 ஆக உயா்ந்துள்ளது.

கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 1,403 போ் புதன்கிழமை வீடு திரும்பியுள்ளனா். இதுவரை கா்நாடகத்தில் 8,77,199 போ் குணமாகி வீடு திரும்பியுள்ளனா். 15,476 போ் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

கரோனா பாதிக்கப்பட்டிருந்த 6 போ் புதன்கிழமை இறந்துள்ள நிலையில், பெங்களூரில் அதிகபட்சமாக 4 போ் இறந்துள்ளனா். கா்நாடகத்தில் இதுவரை 11,971 போ் உயிரிழந்துள்ளனா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →