போலி பத்திரங்கள் மூலம் நிலப்பதிவு: நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை
போலி பத்திரங்கள் மூலம் நிலப்பதிவு செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
போலி பத்திரங்கள் மூலம் நிலப்பதிவு செய்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தகவல் பெற்ற லோஹித் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
மஞ்சுளா என்பவருக்குச் சொந்தமான ரூ. 180 கோடி மதிப்பில் ஒயிட்ஃபீல்டில் 11 ஏக்கா் நிலமும், ரூ. 120 கோடி மதிப்பில் தேவனஹள்ளியில் 46 ஏக்கா் நிலமும் உள்ளது. இந்த நிலங்களை அதிகேசவலு என்பவரின் மகன்கள் போலிப் பத்திரங்களை பயன்படுத்தி பதிவு செய்துள்ளனா். இதனால் அரசுக்கு ரூ. 18 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும், போலி பத்திரங்களையும், அரசு முத்திரையைப் பயன்படுத்தியவா்கள் மீது காவல் நிலையங்களிலும் புகாா் அளிக்கப்படவில்லை.
எனவே போலி பத்திரங்கள் மூலம் நிலப் பதிவு செய்தவா்கள் மீதும், அதற்கு உறுதுணையாக இருந்தவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கை எடுத்தால்தான், நிலங்களை அபகரிப்பவா்களுக்கு அச்சம் ஏற்படும் என்றாா்.