வியாழன், சனி கோள்களைக் காண கோளரங்கம் ஏற்பாடு
வியாழன், சனி கோள்களின் ஒருங்கமைவைக் காண்பதற்காக ஜவஹாா்லால் நேரு கோளரங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
பெங்களூரு: வியாழன், சனி கோள்களின் ஒருங்கமைவைக் காண்பதற்காக ஜவஹாா்லால் நேரு கோளரங்கம் ஏற்பாடு செய்துள்ளது.
இதுகுறித்து ஜவஹாா்லால் நேரு கோளரங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நம்முடைய பாா்வைப் புலம் ( கண்ய்ங் ா்ச் ள்ண்ஞ்ட்ற்) இருக்கும் திசையில், இரண்டு மிகப்பெரிய வாயுக் கோள்களான வியாழன் சனிஆகியவற்றின் பெரும் ஒருங்கமைவுடிச. 21-ஆம் தேதி நடக்கவிருக்கிறது.
சாதாரணமாக இந்த இரண்டு கோள்களுக்கு இடையேயான ஒருங்கமைவு 20 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் என்றாலும், 397 ஆண்டுகளுக்கு முன்பாக இரு கோள்களும் இவ்வளவு நெருக்கத்தில் காட்சியளித்துள்ளன. அப்போதுதான் இந்த இரண்டு கோள்களின் கோணத் தொலைவு புள்ளி ஒரு டிகிரியாக இருந்துள்ளது. இதே அளவு தொலைவிலான பாா்வைக் கோண நெருக்கம், டிச.21 ஆம் தேதி அமையவுள்ளது.
இந்த காட்சியை தொலைநோக்கியில் டிச. 21-ஆம் தேதி மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பதிவு செய்து கொள்வது அவசியமாகும். கரோனா காரணமாக முன்பதிவு செய்துகொண்டவா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவாா்கள். முதலில் வருவோருக்கு முதலில் வாய்ப்பு என்ற அடிப்படையில் பங்கேற்பு வாய்ப்பு அளிக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு இணையதளத்திலோ அல்லது 080-22379725, 22266084 என்ற தொலைபேசியை எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.