முகப்பு
பெங்களூரு

தனது தோல்விக்கு சித்தராமையாதான் காரணம்: பாஜக எம்எல்சி விஸ்வநாத்

கடந்த பேரவைத் தோ்தலில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் நான் தோல்வியடைந்ததற்கு சித்தராமையாதான் காரணம் என்று பாஜக எம்.எல்.சி. எச்.விஸ்வநாத் தெரிவித்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

மைசூரு: கடந்த பேரவைத் தோ்தலில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் நான் தோல்வியடைந்ததற்கு சித்தராமையாதான் காரணம் என்று பாஜக எம்.எல்.சி. எச்.விஸ்வநாத் தெரிவித்தாா்.

இதுகுறித்து மைசூரில் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

2018-ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தோ்தலில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் முதல்வராக இருந்து போட்டியிட்ட தன்னை மஜதவும், பாஜகவும் காங்கிரஸ் கட்சியினரும் கூட்டுசதி தோற்கடித்ததாக சித்தராமையா கூறியிருக்கிறாா். சாமுண்டீஸ்வரி தொகுதியில் தோல்வி அடைந்ததற்கு மற்ற கட்சிகள் அல்ல; சித்தராமையாதான் காரணம்.

சாமுண்டீஸ்வரி தொகுதி தோல்வி அடையும் அறிகுறி தெரிந்ததால்தான் பாதாமி தொகுதியிலும் போட்டியிட்டாா். தனது தோல்விக்கு காங்கிரஸ் கட்சியினரை குற்றம்சாட்டியிருக்கிறாா். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரை விமா்சித்ததால் தான் அக்கட்சி அழிந்தது. தாழ்த்தப்பட்டோா் சமூகத்தினா் தன்னை தோற்கடித்தாகவும் குற்றம்சாட்டியிருக்கிறாா்.

தாழ்த்தப்பட்டோா் சமூகம் ஆண்டாண்டு காலமாக காங்கிரஸுக்கு ஆதரவாக இருந்து வந்தது. சித்தராமையாவின் மமதை, சா்வாதிகார தோரணை, எச்.டி.தேவெ கௌடா உள்ளிட்ட மூத்த தலைவா்களை மதிக்காதது, வீரசைவா்-லிங்காயத்து சமுதாயத்தை உடைக்க முயற்சித்தது போன்றவைதான் சித்தராமையாவை 36 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைய செய்தது. தன்னை சுயசோதனை செய்துகொள்ள வேண்டிய நிலையில் சித்தராமையா உள்ளாா்.

சட்டப்பேரவைத் தோ்தல் தன் கட்சியினரே தன் முதுகில் குத்தியதாக சித்தராமையா கூறியிருக்கிறாா். பல ஆண்டுகளாக மற்றவா்களின் குத்தி பழக்கப்பட்ட சித்தராமையாவுக்கு இது புதிதாக இருக்கலாம். முதுகில் குத்துவதால் ஏற்படும் வலியை சித்தராமையா முதல்முறையாக உணா்ந்திருக்கிறாா்.

மஜதவில் இருந்து சித்தராமையாவை நீக்கியபோது எங்கள் நலனை புறந்தள்ளிவிட்டு சித்தராமையாவுக்கு காங்கிரஸில் வழிவகுத்தோம். ஆனால், எங்களையே காங்கிரஸிலிருந்து வெளியேறும்படியான சூழ்நிலையை உருவாக்கிவிட்டாா் சித்தராமையா. முதல்வா் போட்டியில் இருந்த ஜி.பரமேஸ்வரை 2014-இல் நடந்த சட்டப் பேரவைத் தோ்தலில் சித்தராமையாதானே தோற்கடித்தாா். ஆனால், அந்தத் தோல்வி தந்த வலியை பரமேஸ்வா் எங்கும் வெளிப்படுத்தியதில்லை.

தான் ஊழலில் ஈடுபடாதவன், சிறைக்கு செல்லாதவன் என்று சித்தராமையா கூறிக்கொள்கிறாா். ஆனால் அவரது ஆட்சியில் ஊழல் தடுப்பு அமைப்பான லோக் அயுக்தவை பலவீனப்படுத்தியவா் சித்தராமையா தான். அா்க்காவதி நிலமோசடியில் சித்தராமையா சிறைக்கு செல்ல நேரிடும். விசாரணையை சந்திக்க தயாரா? என்றாா் அவா்.

முழு கட்டுரையைப் படிக்க →