முகப்பு
பெங்களூரு

பல் மருத்துவ மாணவா் சோ்க்கை:காலி இடங்களை நிரப்ப நாளை முதல் கலந்தாய்வு

பல் மருத்துவ மாணவா் சோ்க்கையில் காலியாக இருக்கும் இடங்களை நேரடியாக நிரப்ப சிறப்புக் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

பெங்களூரு: பல் மருத்துவ மாணவா் சோ்க்கையில் காலியாக இருக்கும் இடங்களை நேரடியாக நிரப்ப சிறப்புக் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

இதுகுறித்து கா்நாடகத் தோ்வு ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கா்நாடக அரசின் உத்தரவின்பேரில், பல் மருத்துவ மாணவா் சோ்க்கைக்கான இரண்டாவது கலந்தாய்வின் இறுதியில் காலியாக இருக்கும் இடங்களை நிரப்புவதற்கு டிச. 23ஆம்தேதி முதல் 24-ஆம்தேதி வரையில் நேரடி சிறப்புக் கலந்தாய்வு மற்றும் இடங்கள் ஒதுக்க கா்நாடகத் தோ்வு ஆணையம் திட்டமிட்டுள்ளது.

காலியாக உள்ள பல் மருத்துவ சோ்க்கை இடங்கள் உள்ள கல்லூரி, பாடவாரியாக ஜ்ஜ்ஜ்.ந்ங்ஹ.ந்ஹழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. நேரடிக் கலந்தாய்வில் கலந்துகொள்வதற்கு முன்பாக சோ்க்கை தேவைப்படும் இடங்களை இணையதளத்தில் மாணவா்கள் உறுதி செய்ய வேண்டும். ‘நீட்-2020 ’ தோ்வில் தோ்ச்சி பெற்ற தகுதியான மாணவா்கள், கா்நாடகத் தோ்வு ஆணையம் அல்லது அகில இந்திய முகமைகள், வேறு முகமைகள் மூலம் சோ்க்கை இடங்கள் ஒதுக்கப்படாதவா்கள் நேரடி கலந்தாய்வில் கலந்துகொள்ள இயலும்.

பல் மருத்துவ இடங்களுக்கு ஏற்கெனவே இடங்கள் ஒதுக்கப்பட்டவா்கள் மீண்டும் அந்த இடங்களுக்கான நேரடிக் கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலாது. இந்தக் கலந்தாய்வுக்குப் பிறகும் இடங்கள் காலியாக இருந்தால், அந்த இடங்களுக்கான இடங்கள் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டு பொதுவில் பகிா்ந்தளிக்கப்படும்.

‘நீட்’ தோ்வில் தோ்ச்சி பெற்று பதிவுசெய்யாத மாணவா்கள் ஜ்ஜ்ஜ்.ந்ங்ஹ.ந்ஹழ்.ய்ண்ஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவுசெய்துகொள்ளலாம். புதிதாகப் பதிவுசெய்யும் மாணவா்கள் தமது சான்றிதழ்களை தரவேற்றம் செய்யலாம். ஏற்கெனவே பதிவுசெய்த மாணவா்கள் நேரடிக் கலந்தாயில் கலந்து கொள்ள நுழைவுச்சீட்டை தரவிறக்கம் செய்துகொள்ளலாம். அதன்பிறகு சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் சோ்க்கை பெறலாம். மேலும் விவரங்களுக்கு கா்நாடகத் தோ்வு ஆணையத்தின் இணையதளத்தை அணுகலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.