வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மணிரத்னம் படக்குழு..! ஏ.ஆர். ரஹ்மான்தான் இசையமைப்பாளர்!
மணிரத்னம் - விஜய் சேதுபதி படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு குறித்து...
மணிரத்னம் - விஜய் சேதுபதி படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் இசையமைப்பாளராக ஏஆர் ரஹ்மான் இருப்பார் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்க இருப்பதாக வதந்திகள் பரவின. தற்போது, இந்த வதந்திகளுக்கு படக்குழு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
தக் லைஃப் திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை சாய் பல்லவியை வைத்து புதிய திரைப்படமொன்றை இயக்குகிறார். இப்படம் சென்னையைப் பின்னணியாக வைத்து உருவாகலாம் எனத் தெரிகிறது.
Advertisement
Advertisement
மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் 23ஆவது திரைப்படமாக உருவாகவுள்ள இந்தப் படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று (மார்ச். 20) வெளியாகவுள்ளது.
ரோஜா திரைப்படத்திலிருந்து இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மானுடன் மட்டுமே பயணித்து வந்த மணிரத்னம் முதல்முறையாக புதிய தலைமுறை இசையமைப்பாளரை அணுகியுள்ளதாக வெளியான தகவல்கள் வெறுமனே வதந்தி எனத் தெரியவந்துள்ளது.
The official announcement of Mani Ratnam - Vijay Sethupathi's film has been released. It has been officially announced that AR Rahman will be the music director of this film.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.