வீழ்ச்சிக்கு பிறகு... எழுச்சி பெற்ற பங்குச் சந்தை! இன்றைய நிலவரம்!
இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகமாவது பற்றி...
இந்திய பங்குச்சந்தை வார இறுதி நாளான இன்று காலை உயர்வுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றது.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று எழுச்சியுடன் தொடங்கிய நிலையில், காலை 10.30 மணி நிலவரப்படி, 885.53 புள்ளிகள் உயர்வுடன் 75,092.77 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகின்றது.
இதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 272.90 புள்ளிகள் உயர்வுடன் 23,275.05 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகின்றது.
Advertisement
Advertisement
சென்செக்ஸில் ரிலையன்ஸ், பாரதி ஏர்டெல், எஸ்பிஐ வங்கி, ஐசிஐசிஐ வங்கி, டிசிஎஸ், இன்போசிஸ் உள்ளிட்டவையின் பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.
ரூ. 13 லட்சம் கோடி இழப்பு
வளைகுடா நாடுகளில் உள்ள எரிபொருள் உற்பத்தி நிலையங்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலின் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தை வியாழக்கிழமை கடும் சரிவைச் சந்தித்தது.
காலை வர்த்தகம் தொடங்கியது முதல் சரிவில் இருந்த பங்குச்சந்தை, மாலை வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 2,496.89 புள்ளிகள் குறைந்து 74,207.24 புள்ளிகளாகவும், நிஃப்டி 775.65 புள்ளிகள் குறைந்து 23,002.15 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவு பெற்றது.
இந்த சரிவினால் முதலீட்டாளர்களுக்கு ரூ. 13 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது.
இதனிடையே, ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி ராஜிநாமா எதிரொலியாக பங்குச்சந்தையில் ஹெச்டிஎஃப்சியின் பங்குகள் சுமார் ரூ. 1 லட்சம் கோடி இழப்பைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
After the fall... the stock market has risen!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.