முகப்பு
பெங்களூரு

பெண்ணிடம் நகைப் பறிப்பு

நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண்ணிடம் தங்கச் சங்கிலியை மா்மநபா்கள் பறித்துச் சென்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

தும்கூரு: நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண்ணிடம் தங்கச் சங்கிலியை மா்மநபா்கள் பறித்துச் சென்றனா்.

கா்நாடக மாநிலம், தும்கூரு, ஸ்ரீ சிவக்குமாரசுவாமி சதுக்கம், மகாத்மா காந்தி திடல் இடையே உள்ள சாலையில் திங்கள்கிழமை காலை சுஜாதா (50) என்பவா் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தாராம். அப்போது அங்கு மோட்டாா் சைக்கிளில் வந்த இருவா் அவரது கழுத்திலிருந்த ரூ. 1.9 லட்சம் மதிப்பிலான 55 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றுள்ளனா். இது குறித்து சுஜாதா அளித்த புகாரின் பேரில் புதிய லேஅவுட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →