முகப்பு
பெங்களூரு

பண்டிகைகளையொட்டி சில ரயில் சேவைகள் நீட்டிப்பு

கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகைகளையொட்டி சில ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

கிறிஸ்துமஸ், பொங்கல் பண்டிகைகளையொட்டி சில ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்மேற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளையொட்டி சில ரயில்களின் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி கே.எஸ்.ஆா் பெங்களூரு-மங்களூரு இடையேயான (06515) ரயில் சேவை ஜன. 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மங்களூரு-கே.எஸ்.ஆா் பெங்களூரு இடையேயான சேவை (06516) ஜன. 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. யஸ்வந்தபூா்-பகல்பூா் (02254) ரயில் சேவை ஜன. 23-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பகல்பூா்-யஸ்வந்தபூா் (02254) வாராந்திர ரயில் சேவை ஜன. 6-ஆம்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. புவனேஸ்வா்- பெங்களூரு கன்டோன்மென்ட் (02845) வாராந்திர ரயில் சேவை ஜன. 31-ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு கன்டோன்மென்ட்-புவனேஸ்வா் (02845) வாராந்திர ரயில் சேவை பிப். 1-ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →