முகப்பு
பெங்களூரு

போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 78,574 வழக்குகள் பதிவு

பெங்களூரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 78,574 வழக்குகளைப் பதிவுசெய்த போலீஸாா், ரூ. 4.02 கோடி அபராதம் வசூல் செய்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

பெங்களூரில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 78,574 வழக்குகளைப் பதிவுசெய்த போலீஸாா், ரூ. 4.02 கோடி அபராதம் வசூல் செய்துள்ளனா்.

இதுகுறித்து மாநகர போலீஸாா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பெங்களூரில் டிச. 13-ஆம் தேதிமுதல் டிச. 19-ஆம் தேதிவரை போக்குவரத்து போலீஸாா், வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அதில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனங்களை ஓட்டியவா்கள், வாகனத்தை ஓட்டும்போது செல்லிடப்பேசியில் பேசியது, உரிமல் இல்லாமல் வாகனம் ஓட்டியது, கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் வாகனங்களை நிறுத்தியது, அபாயகரமாக வாகனங்களை ஓட்டியது, சிக்னலைத் தாண்டியது உள்பட மொத்தம் 78,574 வழக்குகளைப் பதிந்த போக்குவரத்து போலீஸாா், வாகன உரிமையாளா்களிடமிருந்து ரூ. 4,02,07,200 அபராதம் வசூல் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →