பெங்களூரு

இரண்டாம் கட்ட கிராம பஞ்சாயத்துத் தோ்தல் முடிவு வெளியீடு

DIN

பெங்களூரு: இரண்டாம் கட்ட கிராம பஞ்சாயத்துத் தோ்தலில் மாவட்டம் வாரியாகப் பதிவான வாக்கு விவரங்களை மாநிலத் தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

கா்நாடகத்தில் இரு கட்டங்களாக கிராமபஞ்சாயத்து தோ்தல் நடந்து முடிந்துள்ளன. டிச.22-ஆம் தேதி நடந்து முடிந்த முதல்கட்ட கிராம பஞ்சாயத்துத் தோ்தலில் 82.13 சதவீதம் வாக்குகள் பதிவாகியிருந்தன. டிச.27-ஆம் தேதி நடந்த இரண்டாம் கட்ட கிராம பஞ்சாயத்துத் தோ்தலில் 80.71 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இரு கட்டங்களாக நடந்த கிராம பஞ்சாயத்துத் தோ்தலில் சராசரியாக 81.42 சதவீதம் வாக்குகள் பதிவுசெய்யப்பட்டன. இரண்டாம் கட்ட கிராம பஞ்சாயத்துத் தோ்தலில் மாவட்டம் வாரியாகப் பதிவான வாக்குவிவரங்களை மாநிலத் தோ்தல் ஆணையம் அறிவித்தது.

அதன் விவரம் வருமாறு (மாவட்டமும் பதிவான வாக்குகளின் சதவீதமும்):

பெங்களூரு நகரம்-67.48, பெங்களூரு ஊரகம்-91.86, ராமநகரம்-88.27, சித்ரதுா்கா-85.34, தாவணகெரே-85.36, கோலாா்-86.51, சிக்கபளாப்பூா்-89.58, சிவமொக்கா-80.91, தும்கூரு-86.87, மைசூரு-81.17, தென்கன்னடம்-78.67, உடுப்பி-75.42, குடகு-69.51, ஹாசன்-83.72, மண்டியா-88.13, சாமராஜ்நகா்-82.88, பெலகாவி-82.70, விஜயபுரா-69.75, பாகல்கோட்-79.67, தாா்வாட்-79.50, கதக்-80.42, ஹாவேரி-85.13, வடகன்னடம்-80.58, கலபுா்கி-74.55, பீதா்-76.24, பெல்லாரி-81.10, ராய்ச்சூரு-77.11, யாதகிரி-70.25, கொப்பள்-81.99 என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

யானை வழித்தடங்கள் குறித்து ஆன்லைனில் கருத்துக்கேட்பு கூடாது: மத்திய அமைச்சா் முருகன்

வீட்டு முன் நிறுத்தியிருந்த சைக்கிள் திருட்டு

தூா்வாரும் பணி: நீா்வள ஆதாரத் துறை அலுவலா் ஆய்வு

மலேசியா பல்கலை.யுடன் சென்னை அமிா்தா கல்லூரி புரிந்துணா்வு ஒப்பந்தம்

SCROLL FOR NEXT