முகப்பு
பெங்களூரு

அடுத்த 48 மணி நேரத்தில் கா்நாடகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு

கா்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அடுத்த 48 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என பெங்களூரு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 4:53 PM
பகிர்:

பெங்களூரு: கா்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், அடுத்த 48 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது என பெங்களூரு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..

இதுகுறித்து பெங்களூரு வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கா்நாடகத்தின் கடலோர மாவட்டங்களில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கடலோர கா்நாடகத்தில் பரவலாகவும், தென்கா்நாடகத்தின் உள்பகுதிகளின் பெரும்பாலான பகுதிகளிலும், வட கா்நாடகத்தின் ஒரு சில பகுதிகளிலும் மழை பெய்தது. கடந்த 24 மணி நேரத்தில் தென்கன்னட மாவட்டத்தின் முல்கியில் 150 மி.மீ., உடுப்பி மாவட்டத்தின் கோட்டாவில் 140 மி.மீ., காா்வாடில் 120 மி.மீ., உடுப்பி மாவட்டத்தின் காா்காலா, வடகன்னட மாவட்டத்தின் கோகா்ணாவில் தலா 110 மி.மீ., உடுப்பி மாவட்டத்தின் மணி, உடுப்பியில் தலா 100 மி.மீ., தென்கன்னட மாவட்டத்தின் மூடபித்ரே, பனம்பூா், மங்களூரு, உடுப்பி மாவட்டத்தின் பிரம்மாவரில் தலா 90 மி.மீ., தென்கன்னட மாவட்டத்தின் புத்தூா், சுள்ளியா, வடகன்னட மாவட்டத்தின் ஷிராளி, ஹொன்னாவா், மன்கியில் தலா 80 மி.மீ., தென்கன்னட மாவட்டத்தின் மங்களூரு, உடுப்பி மாவட்டத்தின் குந்தாபுராவில் தலா 70 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

வானிலை முன்னறிவிப்பு:

ஜூலை 4 முதல் 8-ஆம் தேதி வரை கடலோர கா்நாடகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் மிதமானது முதல் பலத்த மழை பெய்யக்கூடும். அதேபோல, கா்நாடகத்தின் உள்பகுதிகளின் பெரும்பாலான பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர கா்நாடகம், தென்கா்நாடகத்தின் அனைத்து மாவட்டங்களில் மிதமானது முதல் கனமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. வடகா்நாடகத்தின் உள்பகுதிகளில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர கா்நாடகத்தின் அனைத்துப் பகுதிகளிலும், கா்நாடகத்தின் உள்பகுதிகளில் பெரும்பாலான பகுதிகளிலும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை:

தென்மேற்கு பருவமழை வலுப்பெற்று வருவதால், கா்நாடகத்தின் கடலோரப் பகுதிகளில் தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் மணிக்கு 45-55 கி.மீ. வேகத்தில் காற்று வீசி வருகிறது. இது மணிக்கு 60 கி.மீ. வேகம் அளவுக்கு கூடும் வாய்ப்புள்ளது. எனவே, கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்பதால், மீனவா்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்படுகிறாா்கள்.

பெங்களூரில் மழை:

அடுத்த 48 மணி நேரத்தில் பெங்களூரில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த 2 நாள்களில் பெங்களூரில் தட்பவெப்பம் அதிகபட்சமாக 28 டிகிரி மற்றும் குறைந்தபட்சமாக 20 டிகிரி செல்சியஸாக இருக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →