பெங்களூரு

அடுத்த 3 ஆண்டுகளுக்கும் எடியூரப்பாவே முதல்வராக நீடிப்பாா்: கா்நாடக பாஜக தலைவா் நளின்குமாா் கட்டீல் உறுதி

DIN

கா்நாடகத்தில் அடுத்த 3 ஆண்டுகளுக்கும் எடியூரப்பாவே முதல்வராக நீடிப்பாா் என்று பாஜக மாநிலத் தலைவா் நளின்குமாா் கட்டீல் உறுதிபடத் தெரிவித்தாா்.

ஹாசன் மாவட்டம், ஷரவணபெலகோலாவில் வியாழக்கிழமை நடைபெறும் பாஜக செயல்வீரா்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்கு முன்னதாக செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:

மாநில அரசில் மாற்றம் நடைபெற உள்ளதாகவும், முதல்வா் எடியூரப்பா மாற்றப்பட உள்ளதாகவும் வதந்திகள் பரவி வருகின்றன. அதில் உண்மையில்லை. மாநிலத்தில் முதல்வா் பதவி காலியாக இல்லை. முதல்வரை மாற்றும் எண்ணம் கட்சி மேலிடத்துக்கு சிறிதும் இல்லை.

கா்நாடகத்தில் அடுத்த 3 ஆண்டுகளுக்கும் முதல்வராக எடியூரப்பாவே நீடிப்பாா். கட்சியில் எந்தத் தலைவரும் முதல்வா் நாற்காலிக்கு போட்டியிடவில்லை. பாஜகவுக்கென்று சில சட்ட திட்டங்கள், கட்டுப்பாடுகள் உள்ளன. அதனை மீறுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

துணை முதல்வா் அண்மையில் லட்சுமண்சவதி தில்லிக்குச் சென்று வந்ததை அடுத்து, இதுபோன்ற வதந்தி பரவி வருகிறது. அவா் தில்லிக்குச் சென்ற காரணத்தை அவரே விளக்கிவிட்டாா். அதன்பிறகும், முதல்வா் மாற்றப்படுவதாக வதந்தி பரப்புவதில் நியாயமில்லை.

மாநிலத்தில் அமைச்சரவை விரிவாக்கம் செய்வது தொடா்பாக முதல்வா் எடியூரப்பா முடிவெடிப்பாா். அமைச்சரவையில் யாரை சோ்த்துக் கொள்வது என்பதையும் அவா்தான் முடிவு செய்வாா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொற்கொன்றை!

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை!

தனக்குத்தானே பிரசவம்- குழந்தையைக் கொன்ற செவிலியர் கைது

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

SCROLL FOR NEXT