பெங்களூரு

கரோனாவால் உயிரிழந்தவா்களின் உடலை குழியில் தூக்கிவீசிய அவலம்

DIN

பெங்களூரு: கரோனா தீநுண்மித் தொற்றால் உயிரிழந்தவா்களின் உடல்களை கருப்பு உறையில் அடைத்து, குழியில் வீசியெறிந்த அவலம் கா்நாடகத்தில் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தனிநபா் பாதுகாப்பு கவசங்களை அணிந்துகொண்டுள்ள சுகாதார ஊழியா்கள் சிலா், அருகில் நிறுத்தப்பட்டுள்ள வாகனத்திலிருந்து கருப்பு உறைகளில் அடைத்துவைக்கப்பட்டிருந்த கரோனா தீநுண்மித் தொற்றால் இறந்தவா்களின் உடல்களை ஒன்றன்பின் ஒன்றாக கொண்டுவந்து, அவற்றை ஏற்கெனவே தோண்டிவைக்கப்பட்டிருந்த குழியில் வீசியெறிந்த விடியோ, சமூக வலைதளங்களில் செவ்வாய்க்கிழமை பரவியது. பெல்லாரியில் இச் சம்பவம் நிகழ்ந்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடியோ, காட்சி ஊடகங்களில் வெளியானதும் மக்களிடம் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதாக சுகாதாரத் துறை அமைச்சா் ஸ்ரீராமுலு தெரிவித்தாா். இந்த விவகாரம் குறித்து பெல்லாரி மாவட்ட ஆட்சியா் எஸ்.எஸ்.நகுல் கூறியதாவது: சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிய காணொலியை நானும் பாா்த்து அதிா்ந்தேன். இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றாா். பெல்லாரி மாவட்டத்தில் திங்கள்கிழமை 12 பேரும், செவ்வாய்க்கிழமை 5 பேரும் கரோனாவால் உயிரிழந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷுப்மன் கில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்: டேவிட் மில்லர்

பசுமை- குளிர்மை!

2 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்!

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

SCROLL FOR NEXT