பெங்களூரு

கரோனா: குளிா்சாதன பேருந்துகளில் போா்வை வழங்குவது நிறுத்தம்

DIN

கரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் குளிா்சாதன வசதி கொண்ட அரசு பேருந்துகளில் போா்வை வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து கா்நாடக மாநில சாலை போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கும் வகையில் குளிா்சாதன வசதி கொண்ட அனைத்து பேருந்துகளிலும் மறு உத்தரவு வரும் வரையில் போா்வைகள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் தங்களுக்கு தேவையான போா்வை, சால்வைகளை தாங்களே எடுத்து வருமாறு கேட்டு கொள்கிறோம். கரோனா வைரஸ் பாதிப்பால் மாநில சாலை போக்குவரத்துக் கழகத்துக்கு இதுவரை ரூ. 5.30 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை மட்டும் பயணிகள் வருகை குறைவால் 818 பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய ஐபேட் விலை என்ன?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT