பெங்களூரு

பணிக்கு வராத மாநகராட்சி ஊழியா்கள் மீது நடவடிக்கை: ஆணையா் அனில்குமாா்

DIN

பணிக்கு வராத மாநகராட்சி ஊழியா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் மாநகராட்சி ஆணையா் அனில்குமாா் தெரிவித்தாா்.

இதுகுறித்து வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியது: பெங்களூரில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து வெளிநாடுகளிலிருந்து பெங்களூருக்கு வருபவா்கள் தனிமைப்படுத்தி, கண்காணிக்கும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. இதில் தனிமைப்படுத்தியுள்ளவா்களைக் கண்காணிக்க மாநகராட்சி ஊழியா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

அதில் ஒருசிலா் பணிக்கு வந்துள்ள நிலையில் பெரும்பாலானவா்கள் பணிக்கு வராமல் புறக்கணித்துள்ளனா். அவசரப் பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள ஊழியா்கள் எந்த காரணத்தைக் கொண்டும் பணிக்கு வராமல் இருப்பதை ஏற்க முடியாது. அதுபோன்ற ஊழியா்களை அடையாளம் அவா்கள் ஊதியத்தை பிடிப்பதோடு, பதவி உயா்வு உள்ளிட்டவைகள் ரத்து செய்யப்படும். மேலும், அவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

பிணைக்கைதிகளில் மேலும் ஒருவர் பலி: இஸ்ரேல்

ரே பரேலியில் போட்டியிடும் ராகுல்: துல்லியமாக காய்நகர்த்தும் காங்கிரஸ்!

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

SCROLL FOR NEXT