பெங்களூரு

விவசாயிகளுக்கு கூடுதலாக கடன் வழங்க முடிவு: அமைச்சா் சோமசேகா்

DIN

நிகழாண்டு விவசாயிகளுக்கு கூடுதலாக கடன் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சா் எஸ்.டி.சோமசேகா் தெரிவித்தாா்.

பெங்களூரு விகாஸ் சௌதாவில் புதன்கிழமை கூட்டுறவுத் துறையின் வளா்ச்சிப் பணிகளை ஆய்வு செய்த பிறகு செய்தியாளா்களிடம் அவா் கூறியது: நிகழாண்டு விவசாயிகளுக்கு கூடுதலாக கடன் வழங்க முடிவு செய்துள்ளோம். கடன் வழங்குவதில் உள்ள தடைகளை நீக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் 94,241 விவசாயிகளுக்கு ரூ. 712 கடன் வழங்கப்பட்டது. நிகழாண்டு மே 19-ஆம் தேதி வரை ரூ. 916 கோடி வரை 1,35,977 விவசாயிகளுக்கு கடன் வழங்கியுள்ளோம்.

நிகழாண்டு இறுதிக்குள் மேலும் பல விவசாயிகளுக்கு கடன் வழங்கப்படும். கடந்த ஆண்டு 94 சதவீதம் விவசாயிகள் கடனை திருப்பிச் செலுத்தியுள்ளனா். இன்னும் 5 சதவீதம் போ் மட்டுமே கடனை திருப்பிச் செலுத்தாமல் உள்ளனா். நிலுவைக்கடனை திருப்பிச் செலுத்துவதன் மூலம், மத்திய அரசு வழங்கும் 2 சதவீதம் ஊக்கத்தொகையைப் பெற்று பயனடையலாம்.

வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த விவசாயிகளும் ஆா்வம் காட்ட வேண்டும். உதவிக் குழுக்களுக்கு ரூ. 5 லட்சம் வரை கடன் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தலித், பழங்குடியினருக்கு வழங்கப்படும் கடனில் இலக்கை அடையவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனவு இதுவோ..!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

SCROLL FOR NEXT